மூளையில் கிருமித் தொற்று; குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

மேற்படி குடும்பத்தார் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பில் கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே. பாஸ்கரன் விசாரணைகள் மேற்கொண்டார். சாட்சிகளை நெல்லியடிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: admin