
தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர், நேற்றைய தினம்(05.03)புதன் கிழமை
மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகளைக் கேட்டு அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை இதற்கு முன்பும் மேற்படி கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொடுத்ததன் நிமித்தம்.அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் இந்த மக்கள் சந்திப்பானது, இலந்தை மோட்டை, குஞ்சுக்குளம், இரண்டாம் கட்டை, பண்டி விரிச்சான் போன்ற கிராமங்களில் காலை 8:00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை நடைபெற்றது.