மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து மரணம்.

யாழில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் தவறி விழுந்து மரணித்துள்ளார்.

கோப்பாய் தெற்கைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது79)என்னும் வயோதிபப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபப் பெண் கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகை பெறுவதற்காக கடந்த (17.02)நடந்து சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் அவருக்கு உதவு முகமாக அவரை ஏற்றி சென்றார்.

இதன் போது இருபாலைச் சந்திக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் தவறி விழுந்துள்ளார்.

இதன் போது காயமடைந்த பெண் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்(04) உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI