இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான பரிசுத்தொகையை வழங்குவதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன் பிரகாரம் ,ரூபா 10 இலட்சமாக இருந்த பரிசுத்தொகை தற்பொழுது ரூபா 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் வழங்குபவர்களின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அறிய தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
1,பணிப்பாளர், கொழும்பு குற்றவியல் பிரிவு 0718591727
2,கட்டளைத் தளபதி,கொழும்பு குற்றவியல் பிரிவு 0718591735

Recommended For You

About the Author: ROHINI ROHINI