அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத்திட்டம் திங்களன்று

இந்த ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத்திட்டம் இதுவாகும்.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றம் கூட உள்ளது.

இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட ஆவணத்தைத் தயாரிப்பதற்கான இறுதிக் கட்டத்திற்கான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்கள் குழுவும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin