காட்டுப் பன்றிகளைச் சுட அனுமதி!

தமிழகத்தில் மலைப்பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள குடியிருப்புகளிலும், விளை நிலங்களிலும், மனித – வன உயிரின மோதல்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன.

அதிலும் குறிப்பாக, காட்டுப் பன்றிகளால் விவசாயப் பயிர்களுக்கு அதிகளவில் சேதம் ஏற்படுவதாக விவசாயிகளால் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதனால் விவசாயிகளுக்கு ஏற்படும் பலவிதமான பாதிப்புகளைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காட்டுப்பன்றிகளைச் சுடுவதற்கான பயிற்சிகளும் தமிழக வனத்துறையினருக்கு கோவையில் வழங்கப்பட்டு வருகிறது.

எவ்வாறு இருப்பினும் சுட்டுக்கொல்வதை விட, அவற்றை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அப்புறப்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் கேரளாவைப் போல சுட்டுக்கொல்லும் அனுமதியை எளிதாக்க வேண்டுமென்று சில விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வரும் நிலையில், அப்படி எப்போதுமே அனுமதியளிக்க முடியாது என்று தமிழக வனத்துறை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin