2025 Mrs. World: தாயகம் திரும்பிய இஷாதி அமந்தா
– விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு
உலக திருமதி அழகுராணிப் போட்டியில் 2ஆம் இடம் இடம்பெற்ற இலங்கையின் இஷாதி அமந்தா இன்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார்.
40ஆவது உலக திருமதி அழகுராணிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வெகாசில் அண்மையில் இடம்பெற்றது.
பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இலங்கை சார்பாக பங்குபற்றிய இஷாதி அமந்தா போட்டியில் 2ஆம் இடத்தை வென்றார்.
அவர் இன்று (04) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் ஊடாக நாட்டிற்கு வருகை தந்ததுடன் அவரை வரவேற்கும் நிகழ்வொன்றும் விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.