சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழில் தேசிய கொடியுடன் பேரணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய கொடிகளை ஏந்தியவாறு பேரணி முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய இளைஞர் இயக்கம் என்ற அமைப்பின் பெயரில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் ஆரம்பித்த பேரணி யாழ். நகரை வலம் வந்தது.
இதன்போது நடைபவனியாகவும் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட வாகனங்களிலும் தேசிய கொடியை ஏந்தியவாறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.