மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77 ஆவது சுதந்திர தின நிகழ்வு

மருதமுனை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த 77ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று (04) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.மனாஸ் தலைமையில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.

தற்போது மைதானத்தில் மருதமுனை கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டு வரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வு வைபவ ரீதியாக இடம் பெற்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியும் அரசியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் Dr. எம்.எம்.பாஸில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்வில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தின் செயலாளர் எம்.ஐ. நஜிமுல் றியாஸ், பொருளாளர் எம்.எம்.சறூக், சிரேஷ்ட உதவி தலைவரும் சுற்றுப்போட்டி குழு தவிசாளருமான ஏ.எம்.றியாஜத், உதவித் தலைவரும் ஒழுக்காற்று குழு தவிசாளருமான ஏ.ஆர்.எம். உவைஸ், தொழில்நுட்ப ஊடகக் குழுவின் தவிசாளர் ஏ.எல்.எம்.ஷினாஸ், மத்தியஸ்தர்கள் குழுவின் தவிசாளர் எம்.என்.எம். நாஜித் உட்பட விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள், கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர்கள், அணிகளின் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், அபிமானிகள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்

Recommended For You

About the Author: admin