சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று (4) இடம்பெற்றது.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், வைத்திய அதிகாரி அலுவலக வாளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், மரநடுகையும் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு மரக்கன்றினை நாட்டினார்.
இதன் போது கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர்கள், இந்து, இஸ்லாமிய மதகுருமார், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு இடம்பெற்ற நிகழ்வில், சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் உரையாற்றுகையில், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பணிகள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சாவல்களை சமூக மட்ட நிறுவனத்தினர், சமூக ஆர்வலர்கள், மாநகர சபை என்பன ஒன்றிணைந்து பணியாற்றுவதன் நிவர்த்திக்க முடியுமென்பதை வலியுறுத்தினார்.
இதன் போது, கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் நிருவாக சபை உறுப்பினர்களான உஸ்தாத் சபா முஹம்மத் நஜாஹி, எம். எம்.முபாரிஸ் ஆகியோர் அங்கு கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது பிரதேச மக்களின் சுகாதார நலன்சார் விடயங்களில் பெரிய பள்ளிவாசல் என்ற வகையில் முழு ஒத்துழைப்புக்களையும் வழங்குமெனத் தெரிவித்தனர்.