சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதத்திற்கு எழுந்து மரியாதை செலுத்தாத மதகுருமார்
வவுனியாவில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் தேசிய கொடி ஏற்றப்படும் போதும், தேசிய கீதம் இசைக்கபடும் போது மதகுருமார் எழுந்து மரியாதை செலுத்தாத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா பதவியேற்பு நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பௌத்த மதகுரு உட்பட அனைத்து மதகுருமாரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தியிருந்தனர். அந்த முன்னுதாரணமான செயற்பாட்டை நாட்டு மக்கள் வரவேற்றிருந்தனர்.
இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று (04) இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதகுருமார் தேசிய கொடி ஏற்றும் போதும், தேசிய கீதம் இசைக்கும் போதும் எழுந்து மரியாதை செலுத்தவில்லை.
தமது இடத்திலேயே அமர்ந்திருந்து அதனை பார்வையிட்டுக் கொண்டிந்தனர். தாய் நாட்டை விட மத தலைவர்கள் என்ற நிலை பெரியதா என அதனை பார்வையிட்ட பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.