சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்?

சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிரம்?

சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை மீண்டும் நாட்டுக்கு வரவழைப்பதில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அசாத் மௌலானா எனப்படும் மொஹமட் மிஹிலார் மொஹமட் ஹன்சீர் என்பவர் சேனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நிகழ்வுகள் குறித்து அவரிடம் மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அரசாங்கம் இந்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

அதற்கு வசதியாக அவர் இலங்கைக்கு வருவதில் சிக்கலாக இருந்த விமானப்பயணத் தடையும் தற்போது நீக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் பெற்றுள்ள அசாத் மௌலானாவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதில் சுவிட்சர்லாந்து சட்டதிட்டங்கள் தடையாக இருப்பதன் காரணமாக அது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துக்கு நேரில் சென்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

Recommended For You

About the Author: admin