சிறார்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு !

நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் நோய் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள சுகாதார நிபுணர்கள் 12,14 மற்றும் 16 வயதுகளுக்கு இடைப்பட்ட சிறுவர்களே மேற்படி நோயினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள விசேட ஊடக சந்திப்பின் போது ,ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நோய் தொடர்பான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் ருவந்தி பெரேரா உள்ளிட்ட மருத்துவத்துறை நிபுணர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin