9 நாட்களில் 70,944 சுற்றுலாப் பயணிகள் வருகை
இந்த வருடத்தின் முதல் 9 நாட்களில் மட்டும் 70,944 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வந்ததாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்யா, அமெரிக்கா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.