மண்ணெண்ணெய் அருந்தி 14 மாத குழந்தை உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது.

கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது.

தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து , மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது.

மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது , உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து , குழந்தையை மீட்டு , கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் குழந்தை மண்ணெண்ணையை குடித்ததன் காரணமாக உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin