தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் ஆரம்பம்!

தேசியதைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.

புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது.

அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்குதெல்லிப்பழை ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவிலில் சமய வழிபாடுகளுடன் ஆரம்பமாகி பின்னர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி வரை ஆன்மிக விழிப்புணர்வு நடைப் பயணமும் அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.

Recommended For You

About the Author: admin