வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடியத்துளள்தாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் மரக்காரம்பளை பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனத்தை  நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் மதிப்பிலான 72 மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் மரக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்படுவதுடன் இன்றையதினம் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளமை குற்ப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin