புங்குடுதீவில் சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம்

சர்வதேச கடற்கரையை சுத்தப்படுத்தல் தினம் மற்றும் தேசிய கடல்சார் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியிலான வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வின் பிரதான நிகழ்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை – யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் 23.09.2022  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட செயலாளர் க.மகேசன் அவர்கள் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், கடற்படையினர் மற்றும் அரச திணைக்கள அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கடற்கரை தூய்மைப்படுத்தல் பணிகள் 19ஆம் திகதி யாழ். பண்ணை கடற்கரையிலும், 20ஆம் திகதி நெடுந்தீவு கடற்கரையிலும், 21ஆம் திகதி வல்வெட்டித்துறை நேதாஜி கடற்கரையிலும், 22ஆம் திகதி காரைநகரிலும், 23ஆம் திகதி புங்குடுதீவு கடற்கரையிலும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கடற்படையினர் மற்றும் அரச அலுவலர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

கடற்கரையை தூய்மைப்படுத்தல் ஊடாக பொதுமக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதுடன் கடல் வளத்தினை பேணும் வகையிலான கருத்துருவாக்கத்தினை மேற்கொள்ளும் வகையிலும் இச் செயற்பாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor