உங்களது வாயை மூட முடியுமா?: அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இலங்கை பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனாவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இதன்போது, அர்ச்சுனாவை பார்த்து சகாதேவன், ‘பாராளுமன்ற உறுப்பினர் போல இல்லாமல், நீங்கள் ஏன் பைத்தியக்காரத்தனமாக பேசுகின்றீர்கள்” என்று கூறினார். அதைக் கேட்டதும் கோபமடைந்த அர்ச்சுனா எம்.பி, “shut up” (வாயை மூடுங்கள்) என்று கூறினார்.

இதன்போது குறிக்கிட்ட தம்பிராசா, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். Shut up என்று எல்லாம் கூற முடியாது. இங்கே அதிகாரிகள் தான் உள்ளார்கள்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, “ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கதைக்கும் போது குறுக்கிடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கின்றது என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றீர்களா?” என்று கூறிவிட்டு, தம்பிராசாவை பார்த்து “can you shut up” (உங்களது வாயை மூட முடியுமா?” என்றார்.

அத்துடன், சகாதேவனை பார்த்து, “உங்களுடன் திருப்பி கதைத்ததற்காக ஒரு நாளில் 8 அல்லது 10 பேரை இடமாற்றம் செய்துள்ளீர்கள். இதனை உங்களது கட்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட தம்பிராசா, “ஒரு அரச அதிகாரியை பொது வெளியில் வைத்து அவமானப்படுத்த கூடாது. இடமாற்றம் பெற்றவர்கள், வேண்டும் என்றால் அமைச்சுக்கு முறையிடலாம்” என்றார்.

இதன்போது குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, “நீங்கள் எந்த கட்சி? உங்களுக்கு கிடைக்கவில்லை தானே nomination. ஆகையால் அடுத்த முறை முயற்சியுங்கள். தயவு செய்து தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள். ஒரு பொம்பிளை பிள்ளையை பற்றி முகநூலில் எவ்வளவு எழுதுகின்றீர்கள். வெளியே போம்” என்றார்.

அதற்கு பதிலளித்த தம்பிராசா, “நீங்கள் இரவு பகலாக ஒரு பொம்பிளையை கொண்டு திரிகிறீர்கள்” என்றார்.

அதற்கு பதிலளித்த அர்ச்சுனா, “நான் ஒன்றைத்தான் கொண்டு திரிகிறேன். நீங்கள் எத்தனையை கொண்டுபோய் வெளிநாடுகளில் கொடுத்தீர்கள் என்று எங்களுக்கு தெரியும். எதற்காக இவரை அழைக்கின்றீர்கள்.

இவர் ஒரு அழையா நபர். ஆகையால் வெளியே செல்லுங்கள். அமைச்சர் அவர்களே, ஒரு அழையா நபரை உள்ளே விட்டு ஏன் பிரச்சினையை உருவாக்குகின்றீர்கள். இவர் யார்? என்ன அடிப்படையில் உள்ளே வந்தார்” என்றார்.

அதற்கு பதிலளித்த யாழ்-கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான சந்திரசேகர், “இனிமேல் பொதுமக்களுக்கோ ஊடகங்களுக்கோ அனுமதி இல்லை.

பொதுமக்கள் முறையிட வேண்டுமாக இருந்தால், நாங்கள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தில் உள்ளோம், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். அவர்களிடம் முறையிடுங்கள்” என்றார்.

Recommended For You

About the Author: admin