பெரியநீலாவணையில் பல்தேவை கலாசார மண்டபம் திறப்பு

கல்முனை மாநகரசபையினால் பெரிய நீலாவணையில் அமைக்கப்பட்டுள்ள பல்தேவை கலாசார மண்டபம் விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இதன் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகள் சசிதம் அங்கு விஜயம் செய்து, மண்டப திறப்பு விழாவுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து மண்டபத்தை வைக்கவுள்ளார்.

உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சின் உள்ளூர் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் இரு மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியாக அமைக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்தில் மாநாடுகள், கூட்டங்கள், கலை, கலாசார விழாக்கள் மற்றும் பொது மக்களின் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கும் ஏற்றவாறு குறைந்த சேவைக் கட்டணத்தில் அனுமதியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin