பிரபல நாடொன்றில் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா!

மெக்சிகோவில் ஏற்பட்ட இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்களுக்கு உதவும் நாய்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டுள்ளது.

பயிற்சி பெற்ற நாய்களுக்கு பட்டமளிப்பு விழா இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைப் பாதுகாக்க பள்ளியில் சிறப்பு வகுப்புகள் பயின்ற நாய்கள் பட்டமளிப்பு விழாவில் உற்சாகமாக கலந்து கொண்டன.

நெருப்பு வளையம் எனப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள மெக்சிகோவில் அதிகளவில் நிலநடுக்கங்கள் பதிவாகும்.

கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் கூட 2 பேர் பலியான நிலையில் இது போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து தங்கள் உரிமையாளர்களைக் காக்க வளர்ப்பு நாய்கள் களம் இறங்கியுள்ளன.

இந்நிலையில் மீட்பு பள்ளியில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிற்சிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட உரிமையாளர்களை இந்த நாய்களால் கண்டறிந்து உதவ முடியும்.

மேலும் பயிற்சி நிறைவடைந்த நிலையில், பட்டமளிப்பு விழாவில் வளர்ப்பு நாய்கள் உற்சாகமாக கலந்து கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor