சீனாவிற்கான கனடாவின் புதிய தூதுவராக சிரேஸ்ட ராஜதந்திரியான ஜெனிபர் மே (Jennifer May) நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடிய பிரதமர் ஜஸ்டின் டுடே இந்த நியமனம் குறித்த பரிந்துரையை செய்துள்ளார் கடந்த 9 மாத காலங்களாக சீனாவிற்கான கனடிய தூதுவர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது.
பெரும்பாலும் ஜெனிபமே தூதுவராக நியமிக்கப்படுவது குறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அரசாங்கம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவிற்கும் சீனாவிற்கும் இடையில் அண்மைக்காலமாக ராஜதந்திர ரீதியில் முரண்பாட்டினை நீடித்து வருகின்றது ஹுவாவே நிறுவன நிதி நிறைவேற்று அதிகாரி கைது கனடிய ராஜதந்திரிகள் கைது போன்ற விவகாரங்களில் காரணமாக சீனாவிற்கும் கனடாவுக்கும் இடையில் அண்மை ஆண்டுகளில் கடுமையான ராஜதந்திர முரண்பாட்டு நிலை நீடித்து வருகிறது.
ஜெனிபமே சேஷ்ட ராஜதந்திரிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது அவர் பல்வேறு நாடுகளில் பல ராஜதந்திர பதவிகளை வகித்துள்ளார்.
சீனாவிற்கு ராஜதந்திரி ஒருவரை நியமிக்காமை தொடர்பில் பிரதமர் சுடோ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.