கனடாவின் சில பகுதிகளை புயல் காற்று தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் பியூனா என்னும் புயல் காற்று அட்லாண்டிக் மற்றும் குறிபக் பகுதிகளை தாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
புயல் காற்று தாக்கம் மற்றும் பலத்த மழை தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 100 முதல் 120 வரையில கிலோமீட்டர் வரையில் காற்றின் வேகம் காணப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும் சில இடங்களில் 10 மீற்றர் அலை உயரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய வளிமண்டல விஎல் திணைக்களம் காலநிலை சீர்கேடு தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான தாலமக்க நிலை காரணமாக பலத்த மழை பெய்யும் எனவும் கடுமையான காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புயல் காற்று தாக்கத்தினால் மின்சார இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இரவு பியோனா புயல் நோவா ஸ்கூட்டியா பகுதியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.