உடலில் தண்ணீர் அளவு குறைந்தால் என்ன ஆகும் தெரியுமா?
உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. உடல் இயங்கத்தேவையான ஆற்றல் கிடைப்பது என்பது ஒருவர் தண்ணீர் குடிக்கும் அளவைப் பொறுத்து அமைகிறது என்கிறது, இயற்கை மருத்துவம்.
நமது உடலில் மூன்று முக்கிய நீர்நிலைகள் உள்ளன. அவை குடல்கள், நுரையீரல்கள், மூளை ஆகும். இந்த உறுப்புகளில் நீரின் அளவு குறையும்போதுதான் நோய்கள் பல உண்டாகின்றன.
குடல் பகுதியில் நீர் குறைந்தால் மலச்சிக்கல், மூலம், குடலிறக்கம், குடல்வால் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும்.
நுரையீரலில் நீர் வறட்சி ஏற்பட்டால் சளி, இருமல், ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா, காசநோய் போன்றவை உண்டாகின்றன. மூளைப் பகுதியில் நீர் வறட்சி ஏற்படும்போது தலைவலி, எரிச்சல், படபடப்பு, கோபம், கவலை உண்டாகின்றன.
இயற்கை மருத்துவத்தில் தண்ணீர் குடிப்பது குறித்து பல தகவல்கள் கூறப்படுகிறது. நாளொன்றுக்குப் பொதுவாக 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
குளிர், மழைக்காலத்தில் 2 லிட்டரும், கோடையில் 3 லிட்டர் தண்ணீரும் குடிக்கலாம். உணவு உண்பதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு கேடு செய்யும். உண்டபின், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும். ‘மடக்’ ‘மடக்’ என்று வேகமாக தண்ணீரை குடிப்பது கூடாது. மிகக் குளிர்ந்த தண்ணீர், அதிகச்சூடான தண்ணீர் செரிமான வேலையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.