வவுனியாவில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் பலி

வவுனியாவில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் பலி

வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று பூவரசங்குளம் பாெலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான மேற்படி நபர் நேற்று மாலை தனது மாட்டை வீடு நாேக்கிக் காெண்டு சென்றபாேது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அண்மையில் வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முன்னாள் கிராம அலுவலரான மோகனகாந்தி என்பவரே மரணமடைந்தவராவார்.

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்துக்கு மேலாக அந்தப் பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளது.

இதனால் அந்த வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

சம்பவம் தாெடர்பில் பூவரசங்குளம் பாெலிஸார் விசாரணைகளை மேற்காெண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin