குடிசன மதிப்பீடுகளுக்கு வரும் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்!
குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேவையான தகவல்களை வழங்குவதில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்புக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு சில வீடுகளில் தகவல்கள் வழங்கப்படுவதில்லை என்ற முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந் நிலையிலேயே மேற்படி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன பொது மக்களுக்கு இவ்வாறான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
எவ்வாறாயினும், குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், டிசம்பர் (23) இந்த பணிகள் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்திற்கான குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அனோஜா செனவிரத்ன இவ்வாறு தெரிவித்தார்