யு.என். டி. பி. யின். அனுசரனையுடன் “மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின்” ஏற்பாட்டில் மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் அமைந்துள்ள பால் குளம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சிரமதானப் பணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி சிரமதானத்தில், குளத்தைச் சுற்றிலும் காணப்பட்ட பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுப் பொருட்கள், முறையே அகற்றப்பட்டன.
குறித்த சிரமதானப் பணியில், மன்னார் பள்ளி முனை மேற்கு, மற்றும் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இணைந்து கொண்டதோடு, அந்தப் பகுதிகளுக்குரிய கிராம சேவையாளர்கள், நகர சபை பணியாளர்கள் அபிவிருத்தி அலுவலர்கள், ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
நடைபெற்ற இந்த சிரமதானப் பணியை, மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர், எம் பிரதீப் நேரில் பார்வையிட்டதுடன், சிரமதானப் பணியை மேற்கொண்ட மக்களுக்கு ஆலோசனைகளையும் வழங்கினார். குறித்த சிரமதானப் பணியானது காலை 7 மணியிலிருந்து 11:00 மணி வரைநடைபெற்றது குறிப்பிடத்தக்கது.