ஈரான் போர்: இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஒரு வார காலக்கெடு?

உலகப் பொருளாதாரத்தில் கடும் தாக்கம்!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளை ஒரு வாரத்திற்குள் முடிவுக்குக் கொண்டு வருமாறு அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்சி மாற்றம் சாத்தியமா?: தெஹ்ரானில் தற்போதைய நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது கடினம் என அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.

இதற்கு தரைவழி இராணுவத் தாக்குதல் அல்லது ஈரானுக்குள் மிகப்பெரிய உள்நாட்டுப் போராட்டங்கள் தேவைப்படும், ஆனால் தற்போது அதற்கான சூழல் இல்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் தனது இராணுவ இலக்குகளை அடைவதில் குறியாக உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்து கவலை கொண்டுள்ளது.

எரிபொருள் விலை உயர்வு: ஈரானுடனான மோதல் தொடங்கிய இரண்டே வாரங்களில், அமெரிக்காவில் ஒரு கலன் பெற்றோல் விலை 60 சதம் (60 cents) வரை உயர்ந்துள்ளது.

இது ட்ரம்ப் வாக்குறுதி அளித்த ‘செழிப்பான பொற்காலத்திற்கு’ பெரும் சவாலாக மாறியுள்ளது.

சந்தையில் நிலவும் அச்சத்தைப் போக்க, அமெரிக்காவின் மூலோபாய பெற்றோலிய இருப்பிலிருந்து (Strategic Petroleum Reserve) 172 மில்லியன் பேரல் எண்ணெயை வெளியிட ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட் (Chris Wright) அவர்களின் கருத்துக்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த மோதலால் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியிலான கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டொலர் வரை உயர்ந்துள்ளது.

எதிர்வரும் திகதிகளில் போர் நிறுத்தப்படாவிட்டால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin