ரஷ்யாவுக்கு, வடகொரியா ஆதரவளிக்கும்: கிம் ஜோங் உன்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு, வடகொரியா எப்போதும் ஆதரவளிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

நேட்டோ கூட்டணியில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அவை ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகின்றன.

அதேபோல் ரஷியாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாக உள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

இரு நாடுகளுக்கிடையே கடுமையான போர் நிலவுவதாகல், 3 ஆம் உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பல நாடுகள் கவலை தெரிவித்தன.

இந்தநிலையில் ரஷிய இராணுவ அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோவ் தலைமையிலான குழுவினர் வடகொரியா சென்று அந்த நாட்டின் ஜனாதிபதி கிம் ஜோங் உன்னை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது கிம் ஜோங் உன் கூறியதாவது, நேட்டோ கூட்டமைப்பின் பொறுப்பற்ற செயலுக்கு பதிலடி நடவடிக்கையே இந்த போர் ஆகும். எனவே உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியா எப்போதும் ரஷியாவுக்கு தனது ஆதரவை அளிக்கும்” என்றார்.

Recommended For You

About the Author: admin