பெங்கல் புயல் காரணமாக தமிழ் நாட்டின் சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 55விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.
இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.
முன்னதாக விமானங்களின் சேவை இரவு 7.30 மணி வரை ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 04 மணி வரை மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால்சென்னை விமான நிலையம் வந்துள்ள பயணிகள் பெரும சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.