ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார் செல்வம் எம். பி.

வடக்கு கிழக்கில்,  மாவீரர் நினைவேந்தல் தடையின்றி இடம் பெற  வழி செய்த  ஜனாதிபதி அனுர குமாரவிற்கு, நன்றி தெரிவித்துள்ளார் செல்வம்  அடைக்கலநாதன் எம்.பி.

மக்களின் மனதில் இருக்கும்  வலி சுமந்த நாளை அஞ்சலி செய்து  நினைவு கூற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் அனுமதியை வழங்கியமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (29.11) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் மனதில் உள்ள சோகங்களை அவர்களை நினைவு கூறுகிற இந்த சந்தர்ப்பத்தையும் எவ்வித இடையூறுகளும் இல்லாமல் முன்னெடுப்பதற்கான அனுமதியை வழங்கிய ஜனாதிபதிக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில்,மாவீரர் நினைவேந்தலின் போது பொலிஸார் மற்றும் இராணுவத்தின் கெடுபிடிகள் தொடர்ந்த வண்ணம் காணப்பட்ட நிலையில்,இம்முறை மாவீரர் தின நினைவேந்தலின் போது ஒரு சில இடங்களில் பொலிஸாரினால் அசௌகரியங்கள் ஏற்படுத்தப்பட்டது.

 இருந்தாலும், இம்முறை ஒரு நிறைவான   நினைவேந்தல் நிகழ்வு வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஜனாதிபதிக்கும்,தற்போதைய அரசிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI