வெள்ளைக்காடாய் காட்சியளிக்கும் காரைதீவு ; மக்களின் இயல்புநிலை பாதிப்பு

அம்பாறை மாவட்ட கரையோர த்தில் உள்ள காரைதீவுப்பிரதேசம் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கின்றது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வானம் இருண்டு மழை தொடர்ச்சியாக பெய்து கொண்டிருக்கிறது.
 எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
வீதிகள் மற்றும் தாழ்நில பிரதேசம் எல்லாம் வெள்ளம் ஆக்கிரமித்து இருக்கின்றது .
பல வீடுகள் வெள்ளத்தில் அமர்ந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு இடம்பெயர வேண்டிய நிர்க்கதி நிலையில் இருக்கின்றார்கள் .
கடல் கொந்தளிப்பாக இருக்கின்ற காரணத்தினால் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியவில்லை.
அங்கு கடல் அரிப்பும் இடம்பெறுகின்றது.
சுனாமி நினைவுத்தூபியும் கடலுக்குள் காவு  கொள்ளப்பட்டிருக்கின்றது .
குளவெளி வீட்டுத் திட்டம் 12-ம் கிராமம் ஆறாம் கிராமம் போன்ற பகுதிகளிலே கூடுதலான வெள்ளம் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பலத்த அசௌகரியத்துக்குள்ளானார்கள்.
பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்திருக்கிறது. காரைதீவு மாவடிப் பள்ளி வீதியில் வெள்ளம் பாய்வதால் போக்குவரத்து ஸ்தம்பிதமாக இருக்கிறது.
பலத்த அசௌகரியத்தின் மத்தியில் உயர்தரப் பரீட்சை நடைபெற்றது.

Recommended For You

About the Author: admin