ஐந்து ஆண்டுகளில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமான இலக்கு

இலங்கையில் அடுத்த ஐந்து வருடங்களில் 36 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கையின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

”பொருட்கள் ஏற்றுமதி மூலம் தற்போது 12 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறுகிறது. இதனை 25 பில்லியன் டொலராக உயர்த்த உத்தேசித்துள்ளோம்.

சேவை வழங்கலின் ஊடாக 3 பில்லியன் டொலர் கிடைக்கப்பெறுகிறது. இதனை 11.5 பில்லியன் டொலராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேவைகளை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக கடல் சார்ந்த முதலீட்டு மன்றம் எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி நடைபெற உள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் ஏற்றுமதியில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க இலங்கை எதிர்பார்த்துள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும்.” என்றார்.

Recommended For You

About the Author: admin