மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவசர நடவடிக்கை.!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காலநிலை சீர்கேடு காரணமாக ஏற்படவுள்ள அபாய நிலைமை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதற்கும் பொது மக்களை பாதுகாப்பதற்கும் மீட்புப் பணிகளை முன்னெடுப்பதற்காகவும் விஷேட அனர்த்த முகாமைத்துவ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜெளசி தலைமையில் இக்குழு செயற்படவுள்ளது.
இதன் கீழ் கல்முனை மாநகர சபை பிரதேசங்கள் இரு வலயங்களாக பிரிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களை உள்ளடக்கிய வலயத்தில் காண்காணிப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாநகர சபையின் கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் அவர்கள் செயற்படுவதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் டிலிப் நௌஷாத் அவர்களின் மேற்பார்வையில் மாநகர சபையின் களப்பணியாளர்கள் அனர்த்த கட்டுப்பாடு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அவ்வாறே மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை மற்றும் மணற்சேனை பிரதேசங்கள் உள்ளடக்கிய வலயத்தில் காண்காணிப்பு மற்றும் இணைப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் அவர்கள் செயற்படுவதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம். பயாஸ் அவர்களின் மேற்பார்வையில் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் பி.ரி.எம். நஹீம் அவர்கள் அனைத்து பிரதேசங்களுக்கும் பொதுவான கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் தற்போதைய பேரிடர் நிலைமையைக் கருத்தில் கொண்டு மாநகர சபையின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு – தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்கள் எவையும் நிகழுமாயின் பொதுமக்கள் பின்வரும் கைத்தொலைபேசி இலக்கங்களில் தமது பிரதேசத்திற்கு பொருத்தமான இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை தெரிவிக்க முடியும்.
ஏ.ஜே.ஏ.எச்.ஜெளசி- பொறியியலாளர்
-0776707257
ஏ.எஸ்.எம்.அஸீம்- உதவி ஆணையாளர்
-0767210343
வை.ஹபீபுல்லாஹ்- கணக்காளர்
-0766805545
டிலிப் நௌஷாத் – DO
-0771865752
எம்.எம்.எம்.பயாஸ் – DO
-0754286800
அனர்த்தங்கள் தொடர்பில் கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி உதவுமாறு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் கேட்டுக் கொண்டுள்ளார்