மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில். “நாமும் சாதனையாளர்களே” என்னும் கருப்பொருளில், மாற்றுத் திறனாளிகளின் உற்பத்திக் கண்காட்சி மற்றும், சந்தைப்படுத்தல் நிகழ்வானது இன்று (22.11), வெள்ளிக்கிழமை, காலை 9.30 மணியிலிருந்து,மாலை 4 மணிவரை, மன்னார், நகரமண்டபத்தில் நடைபெற்றது.
வாழ்வுதய இயக்குனர் அருட்பணி G.A அருள்ராஜ் குரூஸ் அடிகளாரின்ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,
மாற்றுத் திறனாளிகளால்,தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டதுடன், சந்தைப்படுத்தலும் இடம்பெற்றது.
மன்னார் கரிற்றாஸ் வாழ்வுதய நிறுவனத்துடன் இணைந்து,”கரிற்றாஸ் கியூடெக் வன்னி”கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து வந்திருந்த மாற்றுத் திறனாளிப் பிள்ளைகளின் கைவண்ணங்களும் இங்கே காட்சிப் படுத்தப் பட்டதுடன் அவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தது.
மேலும் மன்னாரில் அழகுக்கலை உட்பட சுயதொழில் மேற்கொள்ளும் பெண்கள் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிப் படுத்தியதோடு,உள்ளூர் உற்பத்திகளும் சந்தைப்படுத்தப் பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில்,
மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை. மன்னார் மறை மாவட்டக் குருமுதல்வர்,கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் கரிற்றாஸ், வாழ்வுதயத்தின் இயக்குனர், மற்றும். பணியாளர்கள் கலந்து கொண்டதோடு,பொதுமக்களும் கலந்துகொண்டு கண்காட்சியைப் பார்வையிட்டு பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.