துளசி விதையின் மருத்துவ குணங்கள்

துளசி செடி மருத்துவ குணங்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது, அதன் இலைகள் சளி-இருமல் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது,

அத்தோடு துளசி விதைகளில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி எப்போதுமே முக்கியமானது ஏனெனில் இது பல நோய்கள் மற்றும் தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

அதன் பயன்கள்

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு துளசி விதையை கஷாயமாக செய்துக் குடிக்கலாம்.

மலச்சிக்கல், அமிலத்தன்மை வாயு பிரச்சனை இருந்தால் இதற்கு துளசி விதைகளை தண்ணீரில் போட்டு வைக்கவும் மேலும் இந்த விதைகள் ஊறும் வரை காத்திருக்கவும்.

இவ்வாறு செய்வதால் விதையில் அமிலத்தன்மை உருவாகிறது. எனவே இந்த நீரை விதையுடன் குடித்து வந்தால் செரிமானம் குணமாகும்.

எடை அதிகரிப்பதால் சிரமப்படுபவர்களுக்கு, துளசி விதைகள் பொக்கிஷமாகும். ஏனெனில் அதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் காணப்படுகின்றன.

இந்த விதைகளை சாப்பிடுவதன் மூலம் ஒருவருக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது இதன் காரணமாக எடை படிப்படியாக குறையத் தொடங்குகிறது.

Recommended For You

About the Author: webeditor