வரி அதிகரிப்பினால் பெண்களுக்கான ஆரோக்கிய துவாய்களின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கீதா குமாரசிங்க கூறியுள்ளார்.
அதன்படி ஆரோக்கிய துவாய்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள பல வரிகள் நீக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்குப் பொறுப்பான பதில் அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆரோக்கிய துவாய்கள் ஆடம்பரப் பொருள் அல்ல, பெண்களின் சுகாதாரத்துக்கு இன்றியமையாத பொருள் என கூறியுள்ள அவர், இதன் விலைகள் அதிகரித்துச் செல்லும் நிலைமை காரணமாக மாணவிகளும் பாடசாலைக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.