தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் பெருமளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களும் ஒரு புதிய மாற்றத்தினையே விரும்புகிறார்கள் அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை பெருமளவில் ஆதரிகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அன்ரன் கமிலஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(09.11)சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தாராபுரம் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த தாராபுரம் கிராமமானது ஒரு காலத்தில் ரிஷார்ட் பதியுதீனின் கோட்டையாக இருந்தது ஆனால் இங்குள்ள பெருமளவான மக்கள் இப்போது தேசிய மக்கள் சக்திக்கே தங்கள் ஆதரவை வழங்குகின்றனர்.
மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், உணவுப் பொதிகளுக்கும் மதுபானத்திற்கும் விலை போகாமல் சிந்தித்து செயற்பட வேண்டும் அதன் மூலமே ஒரு பலமான பாராளுமன்றத்தை உருவாக்க முடியும் என்றார்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள்
சக்தியின் வன்னிமாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிஷங்க, வன்னிமாவட்ட வேட்பாளர் அன்ரன் கமிலஸ், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அப்துல் வாஜித், கட்சியின் செயற்பாட்டாளர் பவாஸ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.