அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் கூட்டணிக்கான ஆதரவுத் தளம் பெருகி வருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத மற்றைய கட்சிகள் எமக்கு எதிராக கீழ்த்தரமான வேலைகளை செய்ய தொடங்கியுள்ளன.
போலி முகநூல்களில் பொய்யான தகவல்களை பரப்புதல், எமக்கு எதிரான போலி பிரசாரங்களை முன்னெடுத்தல் போன்றவற்றை செய்ய தொடங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை காலம் முடிவடையவுள்ள நிலையில் எமக்கு எதிரான கருத்துகளை பரப்ப, அரச இயந்திரங்களுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளனர் என்று அறிகிறோம்.
எனவே, தமிழ் மக்கள் அவர்களின் போலி பிரசாரங்களை நம்பாது விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதேனும் தகவல்கள், விவரங்கள் விளக்கங்கள் தேவையெனில் எம்மை அணுகி அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
மக்கள் மாற்றத்துக்குத் தயாராகி விட்டனர். புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்புகின்றனர். கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்கள் மீண்டும் தமக்கு கால நீடிப்பு கோரி தமிழ் மக்கள் ஆணையை கேட்டு நிற்கின்றனர். அவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்
தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடியாதவர்கள். தற்போது அபிவிருத்தி , வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து உள்ளவர்களை இலக்கு வைத்து தாம் அமைச்சு பதவியை ஏற்பது தொடர்பாக சிந்திக்கின்றோம் என்று கூறி அவர்களின் வாக்குகளை பெற முனைகின்றார்கள்.