மௌன காலத்தில் வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட தடை

பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் எதிர்வரும் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

“11ஆம் திகதி நள்ளிரவு 11 மணி முதல் மௌன நேரத்தைக் கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களை கேட்டுக் கொள்கிறோம். அமைதியான காலத்தில் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்பதுடன், பிரச்சாரத்திலும் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு மத ஸ்தலங்கள், மத குருமார்கள் மற்றும் அவர்களின் மத நடவடிக்கைகளை பயன்படுத்த கூடாது.

மௌன காலத்தில் தனிப்பட்ட விளம்பரத்திற்காக பிரித் நூல் கட்டுவது அல்லது ஆசீர்வாதம் போன்ற படங்களை எடுக்கக் கூடாது. இப்படி ஒரு கீழ்நிலையான அரசியலில் எவரும் விழக்கூடாது.” என்றார்.

Recommended For You

About the Author: admin