அரசியலையும் தலைமை கற்றுத்தந்தது – ஜனநாயகப் போராளிகள்

“ஆயுத வழியை மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை, அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்து விட்டே சென்றது”- வேந்தன் தெரிவிப்பு.

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சிவநாதன் வேந்தன் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

“ஆயுதப் போராட்ட காலத்தில் எமது இனத்திற்காக எவ்வாறு தூய்மையான போராட்டத்தை முன்னெடுத்தோமோ அவ்வாறான ஒரு தூய அரசியலை மேற்கொண்டுள்ளோம். புனர்வாழ்வு பெற்று வெளியேறிய எமது போராளிகள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

மாவீரர் குடும்பங்கள் பல துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர். இந்த இன்னல்களைத் தகர்க்க எமக்கு ஒரு சந்தர்ப்பம் தாருங்கள்.

ஆயுத வழியை மட்டும் எமக்கு தலைமை கற்பிக்கவில்லை, அரசியல் ரீதியான கற்பினைகளையும் தலைமை தந்து விட்டே சென்றது. யுத்தம் மெளனிக்கப்பட்டாலும் மக்களுக்கான தூய அரசியலை நாம் முன்னெடுத்தே வருகிறோம்.

கடந்த காலத்தில் அரசியல் கட்சிகள், தலைமைகள் பிளவடைந்து தமது அரசியல் இருப்பை தக்க வைக்க முனைகின்றனர். நாம் அவ்வாறு அல்ல.

ஐந்து கட்சிகள் ஒற்றுமையா ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியாக ஐக்கியப்பட்டு வந்துள்ளோம். மக்கள் விரும்புவதும் அதுவே. மாற்றம் என்பது மக்கள் விரும்பும் ஒற்றுமையே!

இதனையே தலைவர் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக அனைவரையும் ஒன்றாக்கி – ஒற்றுமையாக பயணிக்க வழியமைத்துக் கொடுத்தார். இன்று அதனை சிதைத்து விட்டு தனித்து போட்டியிட்டு 396பேர் ஆறு ஆசனத்துக்கு போட்டியிடும் அவல நிலையை உருவாக்கி விட்டுள்ளது.

மக்கள் தெளிவாக சிந்தித்து ஒற்றுமைக்காக சங்குச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என வேந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான ஜே. வி. பியின் கடந்த கால அரசியல் பற்றியும் இந்த சந்திப்பின்போது அவர்  விமர்சித்துள்ளார்.

Recommended For You

About the Author: S.R.KARAN