இன்றைய ராசிபலன் 06.11.2024

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக இருக்கவும். இன்று பிறரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டாலும், முடிவை நீங்களே கவனமாக எடுக்கவும். இன்று பிறருக்கு கொடுத்த கடன் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதிநிலை வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான நாள். எந்த வேலை செய்தாலும் அதில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது

ரிஷபம்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உறவினர்களுக்கு உதவவும், அவர்களுக்காக பணம் ஏற்பாடு செய்யவும் நினைப்பீர்கள். உங்களின் இன்றைய கடினமான உழைப்பு எதிர்காலத்தில் சிறப்பான பலனை தரும். இன்று நாள் முழுவதும் சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய முதலீடு, புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்க வேலைகளில் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு, பதட்டமான சூழ்நிலை இருக்கும். உறவுகளை பலப்படுத்த விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். நீங்கள் எந்த வேலையிலும் சிறப்பான வெற்றியை எதிர்பார்க்கலாம். வாழ்க்கைத் துணையின் வெற்றியை கண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வேடிக்கையாக நேரத்தை கழிப்பீர்கள். கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் மூலம் அனுகூலம் நிறைந்ததாக இருக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் நல்ல வெற்றி கிடைக்க கூடிய நாள். குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகள் மூத்த நபர்களின் உதவியால் தீர வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக வலுவான நிலையில் இருப்பீர்கள். இன்று எங்காவது முதலீடு செய்திருந்தால் அதன் மூலம் லாபகரமான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்கள் தங்கள் தொழிலில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். அதனால் பெரும் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று குழந்தையின் திருமணம் தொடர்பான பிரச்சனைகள் உறவினர்கள் மூலம் தீரும். உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்க கூடிய நாள். யார்க்கேனும் கடன் கொடுத்திருந்தால் அதை திரும்ப பெற வாய்ப்புள்ளது. உங்களின் நிதிநிலை வலுப்படக்கூடிய நாள். நண்பர்கள் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்லவும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று அலுவலகத்தில் சில முக்கிய வேலைகள் அல்லது பொறுப்புகள் உங்களுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பணிச்சுமை அதிகரிக்கும். இன்று வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவால் கவலை குறையும். குடும்பத்தில் பதற்றமான சூழ்நிலை இருக்கும். உங்கள் பேச்சில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது நல்லது. உங்களின் செலவுகள் கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலை செய்தாலும் அதில் தாமதம் ஏற்பட்டாலும் நல்ல வெற்றியை பெறலாம். இதனால் கவலையும், மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வியாபாரம் தொடர்பாக சகோதரர்களின் ஆலோசனை பெறுவது நல்லது. உடல் நலம் தொந்தரவு தர வாய்ப்புள்ளது. சிறிய பிரச்சனைக்கு கூட மருத்துவரை அணுகுவது நல்லது. குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலையையும் முடிக்க மிகவும் போராட்டமாக உள்ளது. மேலும் சில ஏமாற்றங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. தாயின் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அது தொடர்பான அலைச்சல் ஏற்படும். இன்று ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கூடுதல் கவனம் தேவை. தொழில் சார்ந்த விஷயத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகஸ்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வேலை தொடர்பாக எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிதாக முதலீடு செய்ய நினைப்பவர்கள் நிதி ஆலோசகர்களின் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது. புதிய திட்டங்களில் கவனம் தேவை. கூட்டுத் தொழில் செய்யக்கூடியவர்களுக்கு சாதகமானதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் உள்ள தடைகளை ஆசிரியர்கள் மூலம் தீர்க்க வாய்ப்புள்ளது.

மகரம்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வீட்டில் விருந்தினர்களின் வருகை பல செலவு அதிகரித்தாலும் மனநிறைவைத் தரும். நான் உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை மனதில் வைத்து செயல்படவும். பெரிய பண பரிவர்த்தனைகளை கவனம் தேவை. பங்கு சந்தை அல்லது வியாபாரம் தொடர்புடையவர்கள் அதிக லாபம் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று பொறுமையுடன் எதை செய்தாலும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று எதிலும் சிந்தித்து செயல்படவும். சகோதரர்களின் திருமணம் தொடர்பாக இருந்த தடைகள் நண்பர்களின் உதவியாளர் தீரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய விவாதம் நடக்கும். இன்று உறவினர்கள், நண்பர்களே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

மீனம்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் சோம்பேறித்தனத்தைக் கைவிட்டு சுறுசுறுப்புடன் செயல்பட வேண்டிய நாள். எந்த வேலையும் சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யவும். முக்கிய முடிவுகளை எடுக்கும் விஷயத்தில் குடும்ப உறுப்பினர்களைக் கலந்து ஆலோசிக்கவும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையை முன்னேற்றமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்

Recommended For You

About the Author: admin