உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கு எனது சொந்தச் செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்;
நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்து விட்டோம்.
இனங்களுக்கிடையே புரிந்துணர்வு இன்மை மற்றும் சம உரிமை
கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களால் உள்நாட்டு யுத்தம் உருவாகி அது பலரையும் காவு கொண்டு விட்டது.
இந்த யுத்தத்தால் தமிழ் மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் மௌனித்து 15வருடங்கள் கடந்து விட்ட போதிலும் தமிழ் மக்கள் யுத்த வடுவில் இருந்து மீள முடியாமல் உள்ளனர்.
அத்தோடு தமிழ் மக்களுக்கு உறவுகளை நினைவு கூர்வது கூட சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகிறது.
இந்நிலையில் பொதுவான நினைவுத்தூபி ஒன்றை அமைத்து யுத்தத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு அரசாங்கம் அனுமதி வழங்கும் பட்சத்தில் எனது சொந்தச் செலவில் பொதுவான நினைவுத் தூபியை நிறுவ நாட்டில் நல்லிணக்கத்தை மலரச் செய்வது சிறந்த ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.