புதிய ஐனாதிபதி தெரிவு தென்னிலங்கையில் ஆட்சி மாற்றம் என கூறப்பட்டாலும் வடக்கு கிழக்கு தமிழர் விடையத்தில் வெறுமனே கடந்த காலங்களைப் போல ஆள் மாற்றம் மட்டுமே என்பதை அநுர அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றன
கடந்த கால ஆட்சியாளர்களுடன் ஊழல் மற்றும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை காட்டிக் கொடுத்து சுயலாப அரசியல் செய்த சில தமிழ் அரசியல்வாதிகள் அநுர அரசிற்கு தாங்களாக வரிந்து கட்டி ஆதரவு வழங்குவோம் என கூறுவதைக் கண்டு தமிழ் மக்கள் ஏமாறக் கூடாது வரும் தேர்தலில் தமிழ் மக்களின் ஒற்றுமையை சீரழிக்கும் இப்படியான தரப்புக்களை நிராகரிக்க வேண்டும்
தமிழ் மக்களின் முதன்மையான கோரிக்கைள் ஆன தேசிய இனப்பிரச்சினைக்கான அதிகாரப்பகிர்வு , பாதிக்கப்பட்ட மக்களின் சர்வதேச நீதி விசாரணை, ஐ நா மனிதவுரிமைத் தீர்மானம் , யுத்தக் குற்ற ஆதாரங்களை சேகரித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், தமிழர் தாயகத்தில் இராணுவ எண்ணிக்கையை குறைத்து தனியார் காணிகளை விடுவித்தல் போன்ற விடையங்களில் கடந்த கால ஆட்சியாளர்கள் போன்றே அநுர அரசு தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர் இதன் மூலம் தென்னிலங்கை ஆட்சிமாற்றம் தமிழர்களுக்கு வெறுமனே ஆள் மாற்றமாகவே உணர முடிகிறது