அண்மைக்காலமாக 30 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் முட்டையின் விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாகவும், குறிப்பாக பெரும்பாலான மொத்த வியாபாரிகள் அதிகளவில் முட்டைகளை கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தமையினால் சந்தையில் முட்டைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் உபரி உற்பத்தி பொருட்கள் சந்தையை விட்டு வெளியேறியுள்ளதால் தற்போது உற்பத்தியாகும் தினசரி முட்டைகள்தான் சந்தைக்கு வருகின்றன எனவும் இதன் காரணமாகவே முட்டையின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.