சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே அண்மையில் இடம்பெற்றதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளதாவது”IMF இன் கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
கட்டமைப்பு மாற்றம் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகள் மட்டத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட வேண்டும் IMFஆகு பிரதிநிதிகள், புதிய அரசாங்கம் இந்த விஷயத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்பது பற்றிய கருத்தியல் விவாதத்தை நடத்தினர்.
எனினும் கட்டமைப்பு மாற்றங்கள் தொடர்பாக விவாதித்து முடிவுகள் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் நடந்த விவாதங்களில் இந்த விஷயம் விவாதிக்கப்படுகிறது.
நாங்கள் இன்னும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை அமைக்கவில்லை.
தற்போது ஜனாதிபதி மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அமைக்க ஆதரவளிக்குமாறு கோரிக்கின்றோம்.
அதன் மூலம் மக்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கும் முறைகளுக்குச் செல்வோம்.
ஒரு அரசாங்கமாக, நாங்கள் அந்த முறையை மாற்றவில்லை, இது சரிதானா என்று நாங்கள் ஆராய்கின்றோம்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கருத்தியல் ரீதியான கலந்துரையாடல் மாத்திரமே நடைபெற்றுள்ளது” இவ்வாறு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.