இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தியுள்ள பிரான்ஸ்
இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றமையினால் அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார்.
போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனை உரிமங்களில் சிலவற்றை பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
இந்த முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். கடந்த வாரம், இஸ்ரேலுக்கான புதிய ஆயுத ஏற்றுமதி உரிமங்களுக்கு ஜேர்மனி இடைநிறுத்தம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காஸா மீதான தாக்குதல் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், இஸ்ரேல் இராணுவம் தற்போது ஹிஸ்புல்லா படைகள் மீது போர் தொடுக்கத் தொடங்கியுள்ள நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் ஆயுத ஏற்றுமதி தடை குறித்து உலக நாடுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.