ஒட்டிசுட்டானில் இருந்து மட்டக்களப்பிற்கு காதலனை பார்க்க சென்ற பெண் கைது.!

காதலனான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை ஒட்டிசுட்டானில் இருந்து சென்ற காதலி ஒருவருக்கு தங்குவதற்கு அடைக்கலம் கொடுத்த பெண் பொலிஸ் உத்தியோத்தரின் வீட்டில் இருந்த 9 பவுண் தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஓட்டிசுட்டானில் வைத்து கைது செய்யப்பட்ட 33 வயதுடைய பெண் ஒருவரை எதிர்வரும் 14 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

ஆரையம்பதியைச் சேர்ந்த திருமணமாகி குழந்தையுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஓட்டிசுட்டான் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ள நிலையில் அங்கு 33 வயதுடைய பெண் ஒருவரை தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அந்த பெண்ணை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் காதலனை தேடி குறித்த காதலி கடந்த ஜுன் மாதம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்துக்கு சென்று காதலனை சந்தித்தித்துள்ளார்.

அவர் ஏற்கனவே திருமணம் முடித்து குழந்தைகள் இருப்பதையறிந்ததுடன் தான் திருமணம் முடிக்கவில்லை என தெரிவித்து காதலித்துவந்துள்ளதுடன் தன்னை காதலன் ஏமாற்றிவிட்டார் என அவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை அங்கிருந்து வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு இடமாற்றம் செய்தனர்.

இனையடுத்து அங்கு கடமையாற்றிவரும் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், குறித்த பெண்ணின் பிரச்சனையை கேட்டறிந்த நிலையில், தற்காலிகமாக தங்குவதற்கு இடமில்லாததால் தனது வீட்டில் தங்கவைத்ததுடன் அவர் வெளியில் செல்லும் போது அவரையும் அழைத்து வீட்டை பூட்டி அதன் திறப்பை வெளியில் வழமையாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்று வந்துள்ளார்.

இவ்வாறு 3 தினங்கள் கடந்த நிலையில் ஜுன் 10 ம் திகதி குறித்த பெண் தான் வீட்டிற்கு போவதாக தெரிவித்து அங்கிருந்து வெளியேறி குறித்த வீட்டிற்கு அருகாமையில் ஒளித்திருந்து, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டிலிருந்து சென்றதும் வீட்டிலிருந்த 9 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளார்.

கடமை முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ளதை கண்டுகொண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நிலையில் குறித்த பெண்ணை திங்கட்கிழமை (30) ஒட்டிசுட்டானில் காத்தான்குடி பொலிஸார் கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டனர்.

கைதான பெண்ணை செவ்வாய்கிழமை (01) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 14ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin