அமெரிக்காவின் தீர்க்கமான நடவடிக்கைகள், அடுத்த ஆண்டு ரஷ்யப் போரை முடிவுக்குக் கொண்டு வரக்கூடும் என உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
அமெரிக்கக் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி இந்த விடயத்தைத் தெரிவித்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இந்த ஆண்டின் இறுதிக்குள் அமெரிக்க மற்றும் உக்ரைன் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு தங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தேர்தலில் எந்த தரப்பு வெற்றி பெற்றாலும் உக்ரைன் மற்றும் ரஷ்யப் போரில் வெள்ளை மாளிகையின் கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமிர் ஜெலென்ஸ்கி சுட்டிக் காட்டியுள்ளார்.