நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முன், ஈரானுடனான பகைமையை அமெரிக்கா முதலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசேஷ்-கியான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் சமீபத்தில் புதிய தடைகளை விதித்தன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரான் ஜனாதிபதி, பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமான எந்த ஆயுதங்களையும் ஈரான் ரஷ்யாவுக்கு வழங்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானின் செயற்பாடுகள் இஸ்ரேல் – காசா மோதல்கள் பரவுவதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன. ஹமாஸை ஈரான் ஆதரிப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் ஈரான் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 19 ஆம் திகதி ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்ததை அடுத்து, புதிய ஜனாதிபதியாக மசூத் பெசேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது